Stridian என்பதன் இலக்கிய ரீதியான கருத்தாவது மிக நீண்ட பயணத்தின் முதல் படியாகும். இதுவே எமது சங்கத்தினால் முதன் முதலாக முன்வைக்கப்பட்ட மிகப்பெரிய அளவிலான பயணம். அத்தோடு இது மாபெரும் முக்கிய நிகழ்வென்பதிலும் எவ்வித ஐயமும் இல்லை. இந்த நிகழ்விற்கான முக்கிய அடித்தளமாக அமைந்தது; சில மாதங்களுக்கு முன் பேராதனை பல்கலைக்கழகத்தின் explorers சங்கத்தினால் எடுத்து நடாத்திய PERA campus என்னும் நடைப்பயண போட்டி ஆகும். இப்போட்டியில் பங்கு பற்றிய எமது பல்கலைக்கழக மணவர்களினால் அவர்கள் அந்நடைப்பயணத்தின் போது எதிர்கொண்ட பல சவால்களையும், அனுபவங்களையும் எமது mora hiking சங்க உறுப்பினர்களுடன் பரிமாறிக்கொண்ட வேளையில் எமக்கு இவ்வாறான நிகழ்வு ஒன்றை எடுத்து நடத்த வேண்டும் எனும் எண்ணமும் ஆசையும் ஏற்பட்டது. இதன் விளைவாக குளிர்மை நிறைந்த மார்கழி மாதத்தின் 11 ஆம் 12ஆம் திகதிகழில் இந்நிகழ்வு நிஜமானது. Stridian எனும் பெயரைக்கொண்ட இந் நடைப்பயணமானது மிகச்சிறிய குழுவினால் மிகக்குறுகிய கால நேரத்தினால் வெற்றிகரமாக எடுத்து நடாத்தப்பட்ட நிகழ்வாகும். Stridian போட்டியை எடுத்து நடத்துவதற்கு முன்பாக செய்ய வேண்டிய முன்னாயத்தங்கள் பெரிய அளவில் காணப்பட்டது.Mora Stridianஅமைப்பாளர்கள் அவசரத்தில் வேலைப்பாடுகளை மேற்கொண்டாலும் அவர்களிடம் மிகச்சிறந்த திட்டம் காணப்பட்டது. இந்நிகழ்வை எடுத்து நடாத்துகையில் பல தடைகள் எதிர்கொள்ளப்பட்டது. இத்தடைகளை ஒன்றன் பின் ஒன்றாக அமைப்பாளர்களால் தீர்த்து வைக்கப்பட்டது. இதன் பொருட்டு பேராதனை பல்கலைக்கழகத்தின் அதன் Explorers சங்கத்தின் வரம்பற்ற அளவிலான உதவிகளும் பெறப்பட்டது. போட்டியானது பேராதனை பல்கலைக்கழக எல்லையிலும் ஹன்தான மலைத்தொடர் பரப்பெல்லையிலும் நடாத்தப்பட்டது. Vikings, Maori, Zulu, Apoche மற்றும் Mayans ஆகிய பெயர்களை கொண்ட ஐந்து குழுக்கள் இப்போட்டியில் பங்குபற்றியது.ஒவ்வொரு குழுவும் எட்டு உறுப்பினர்களை கொண்டிருந்தது(5ஆண்,3பெண்). மொரட்டுவை பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன் நிறைவு பட்டறையின் மூலமாகவே போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இப்பட்டறையின் போது பங்குபற்றிய அனைவருக்கும் பல்வேறு அம்சங்கள் பயில்விக்கப்பட்டு பயிற்சி கொடுக்கப்பட்டது. இப்பயிற்சிகளானது முடிச்சுக்கள், முதலுதவி, வரைபடம் படித்தல் , கூடாரம் அமைத்தல் மற்றும் பாத்திரங்களின்றி சமைத்தல் என்பவற்றை மையமாகக்கொண்டு செயற்பட்டது. இவ்வகையான பயிற்சிகள் நடைபயணத்தின் போதும், நம் அன்றாட வாழ்விலும் பெரிதும் உதவியாக இருக்கும்.

stridian16 (35) stridian16 (31) stridian16 (30) stridian16 (29) stridian16 (28) stridian16 (21) stridian16 (68) stridian16 (104) stridian16 (73) stridian16 (135) stridian (24) stridian (40)

இதன்போது போட்டியைப்பற்றி தகவல்களும் போட்டியின் விதிமுறைகளும் அன்றைய நாளின் நிகழ்வுகள் பற்றியும் போட்டியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்பின் நீண்ட நடை பயணமானது ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது குழு தனது பயணத்தை 11 மணியளவில் ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து அடுத்துள்ள ஒவ்வொரு குழுவும் தனது பயணத்யை 20 நிமிடங்கள் கால இடைவேளையுடன் அதே பாதையில் பின் தொடர்ந்தனர். பயணப்பாதைக்கான பாதை குறிகள் குறிப்பிடப்பட்டு இருந்ததுடன் ஒவ்வொரு குழுவுக்கும் பயணப்பாதையின் வரைபடம் கொடுக்கப்பட்டு இருந்தது. பயணபாதையானது பேராதனைப்பல்கலைக்கழக மைதானத்தில் தொடங்கி சவால்கள் நிறைந்த நிலப்பகுதிகளான காடுகள் , மலைஏற்றங்கள் மற்றும் நீர்போக்குகளின் ஊடாக ஹன்தான மலையின் கூடார பகுதிக்கு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு குழுக்களினதும் பயணத்திற்கான அளவீட்டை அறிய, முடிங்சுக்கள், முதலுதவி, வரைபடம் படித்தல் போன்றவற்றிலான அறிவை குழு உறுப்பினர்களிடத்து பரீட்சிக்கவும் அபாதைக்கு உள்ளான ஒருவரை எவ்வாறு குறைந்தளவிலான பொருட்களை உபயோகித்து தூக்கிசெல்வது என்னும் திறனையும் பரிசோதிக்க இந் நடைபாதையில் 3 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. 3 எழுத்துக்களை கொண்ட சிறிய கடதாசிகளும் வெவ்வேறு இடங்களில் மறைத்து வைக்கப்பட்டு புதையல் வேட்டை நிகழ்வும் நடத்தப்பட்டது

viewphotoalbumமுகாம் அமைக்கும் தளத்திலிருந்து சற்று அருகிலிருந்து அன்றைய நாளுக்கும் அடுத்த நாளுக்குமான நீர் குழுவினரால் எடுத்துச் செல்லப்பட்டது.

சுமார் பி.ப 4.00 மணியளவில் அனைத்து குழுக்களும் முகாம் தளத்தை வந்தடைந்தனர். 30 நிமிடங்கள் ஓய்வின் பின் பாத்திரங்கள் இன்றி சமைக்கும் போட்டி ஆரம்பமானது. இப்போட்டியின் போது ரொட்டி தயாரிக்க வேண்டி ஏற்பட்டது. இதற்காக முகாம் தளத்தில் உள்ள பொருட்கள் பாவனைக்கு எடுக்கப்பட்டது. இதன் பின் Stridian குழுவினரால் இரவு வேளை உணவு தயாரிக்கப்பட்டு பி.ப 8.30 மணியளவில் அனைத்து குழுக்களினாலும் வேலை நிறைவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சுடரொளி களியாட்டத்துக்கான நேரம் வந்தது. ஹந்தான மலைத்தொடரின் குளிர் பனியும் முழு நிலவு வெளிச்சமும் ஒன்றுகூட பைனஸ் மரங்களுக்கு இடையில் சுடரொளி களியாட்டம் உண்டாக்கப்பட்டது. இதன் போது போட்டியின் போது ஏற்பட்ட களைப்புக்களை குழுக்கள் ஒவ்வொன்றிலிருந்தும் நாடகங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அனைவரும் பாடலுடன் கூடிய சுடரொளி களியாட்டத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இறுதியாக அடுத்த நாளுக்கான சவால்களை எண்ணியவாறு துயில் கொள்வதற்கான நேரம் வந்தது. இருப்பினும் சங்கத்தை சேர்ந்த சில உறுப்பினர்கள் மின்விளக்கின் உதவியுடன் மலையின் அடித்தளத்திற்கு சென்று அடுத்த நாளுக்கான காலை உணவை எடுத்து வந்தனர்.

அடுத்த நாளின் காலநிலையும் இதமானதாகவும் சாதகமானதுமாகவுமே அமைந்தது.காலை தேநீர் வேளையின் பின் முகாம் தளத்தின் அமைப்பை முன் இருந்தவாறே அமைப்புகளை ஏற்படுத்தி விட்டு அனைவரும் இந்நாளை பற்றிய நம்பிக்னையுடனும்,எதிர்பார்ப்புடனும் உடற்பயிற்சியில் ஈடுபட்டனர்.

stridian (60)

<pஇரண்டாவது நாள் நடைபயணமானது மு.ப 8 மணியளவில் முதலாவது குழுவினால் ஆரம்பிக்கப்பட்டது,அதனை தொடர்ந்து 20 நிமிடங்களின் பின் ஒவ்வொரு குழுவும் தமது பயணத்தை தொடங்கியது.பயணத்தின் போது ஆறு சோதனை சாவடிகள் அமைக்கப்பெற்று இருந்தன, இவற்றின் மூலம் ஒவ்வொரு குழுவும் வருகை நேரமும் ,குழு அங்கத்தவர்களின் முதலுதவி சம்பந்தமான அறிவையும் பரீச்சித்து புள்ளிகள் வழங்கப்பட்டன. இரண்டாம் நாளின் பயணப்பாதையானது ஹந்தானமலை உச்சியினூடு காணப்பட்டது.இதனால் அனைத்து குழுக்களும் ஹந்தான மலையின் பரந்த பரப்பை உச்சியில் இருந்து காணும் சந்தர்ப்பத்தை பெற்றது.இம்மலை உச்சியில் தென்றல் காற்றும் ஒரு வித நிசப்தமும் அமைந்து காணப்பட்டது.விதிமுறையானது காட்டுப்பாதையினூடு செல்வதாகும் .இதன் போது சரியான பாதையில் சிலகுழுக்கள் சென்றாலும் ஒவ்வொரு சில குழுக்கள் பாதை மாறி சென்று இருந்தனர்.குழுக்களுக்கு வழங்கப்பட்ட புள்ளிகளானது நேர அளவீட்டுக்கு மட்டுமல்லாது,குழுச்செயற்பாட்டிற்கும்,குழு அங்கத்தவர்களிற்கிடையிலான ஒற்றுமைக்கும் சேர்ந்து வழங்கப்பட்டது.இவற்றின் மூலம் அனைவரும் பல அனுபவங்களையும் பெற்றனர்.

Photographs – Asanka Asiri, Shutter U, Media Club UoM

Translated by Chrish Chrishatheya from article by Asanka Asiri